விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு சிறை தண்டனை

பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தபோது, பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்தியர் ஒருவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயதான ரஜத், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில் பயணித்தபோது, பணிப்பெண்ணை பின்னால் இருந்து பிடித்து தன்னுடன் ஒரு கழிப்பறைக்குள் தள்ளினார் ரஜத்.
விமானம் சாங்கி விமான நிலையத்தை அடைந்ததும் அவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை சிறைத்தண்டனை கோரி, துணை அரசு வழக்கறிஞர் யூஜின் லாவ், பணிப்பெண் ஓரளவு மனரீதியான பாதிப்பை சந்தித்ததாகவும், ரஜத் செய்த காரியத்தால் தான் பயந்து, வெறுப்படைந்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
(Visited 2 times, 2 visits today)