இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அமெரிக்கா செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் முதல் உயர்மட்ட பயணம் இதுவாகும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்கா செல்லவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க அவர் சகாக்களை சந்திப்பார்” என்று அது ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்சங்கர் அமெரிக்காவில் உள்ள இந்திய கன்சல் ஜெனரல்களின் மாநாட்டிற்கும் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி