இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை்குச் சென்று திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல் ஷி யான் 6 இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வரவுள்ள பின்னணியில் அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்றக் குழாய் அமைப்பை நிறுவும் பணிகளை பார்வையிடவுள்ளார்.
தகவலறிந்த வட்டாரத்தின்படி, அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதி நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைப்பது உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சீன ஆராய்ச்சிக் கப்பலான Xi Yan 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளது. அதற்கு முன்னரே இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தமை விசேட அம்சம் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.