விமான சேவைகளை இரத்து செய்த இந்திய நிறுவனங்கள்!
சுமார் 12,000 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக எத்தியோப்பியாவில் வெடித்துள்ள ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை காரணமாக விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதன்படி ஏர் இந்தியா விமானம் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பால் மேல் எழுந்துள்ள சாம்பல், புகை செங்கடலின் மேல் ஏமன் மற்றும் ஓமன் நோக்கி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த சாம்பல் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் நோக்கி பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட டெல்லி மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை சாம்பலால் பாதிக்கப்பட்ட பாதைகளைத் தவிர்க்கவும், சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில் விமானத் திட்டங்கள், வழித்தடம் மற்றும் எரிபொருள் தேவைகளை சரிசெய்யவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா (Air India) , இண்டிகோ (IndiGo) மற்றும் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet)ஆகியவை அடங்கும். வெடிப்புக்குப் பிறகு பதினொரு விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





