அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி இந்திய பிரஜை பலி!

நியூயார்க்கின் சான் அன்டோனியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் சச்சின் தாஹு என்ற 42 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு முன்னதாக, சான் அன்டோனியோவில் உள்ள செவியோட் ஹைட்ஸில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவரை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தாஹு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.
இதன்போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் அவர் கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)