பிரித்தானியாவில் குறுகிய காலத்தில் 190 மில்லியன் முதலீடுகளை ஈர்த்த இந்தியரின் வங்கி!
பிரித்தானியாவின் நியோபேங்க் மோன்சோ 190 மில்லியனை புதிதாக பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அதன் மொத்த நிதி 610 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஹெடோசோபியா மற்றும் கேபிடல்ஜி, ஆல்பாபெட் உள்ளிட்ட நிதி முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
சமீபத்திய நிதியை தொடர்ந்து மொன்சோவின் மொத்த நிதி $5.2 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
மோன்சோவின் சமீபத்திய நிதி திரட்டலில் சிங்கப்பூர் இறையாண்மை நிதியமான GICயும் பங்கேற்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மோன்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டிஎஸ் அனில், தனது நிறுவனம் புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் அதன் சர்வதேச விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்தவும் பணத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாங்கள் ஒரு பணி சார்ந்த நிறுவனமாகும். இது மக்கள் தங்கள் நிதித் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே இடத்தை உருவாக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் தனது முதல் ஓய்வூதியத் தயாரிப்பைத் தொடங்க மோன்சோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மோன்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டிஎஸ் அனில் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.