இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாத தடை
ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த பாரா ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இந்திய பாட்மிட்டான் வீரர் பிரமோத் பகத்துக்கு சர்வதேச பாட்மிட்டன் சம்மேளனம் 18 மாத தடை விதித்துள்ளது.
இதன்படி அடுத்த 18 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளில் பிரமோத் பங்கேற்க முடியாது. எனவே விரைவில் தொடங்க உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பிரமோத் இழந்துள்ளார்.
12 மாதங்களில் தொடர்ச்சியாக 3 முறை பிரமோத் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைத்தார். இதனால் அவர் ஊக்கமருந்து தடை விதிகளை மீறியதை உறுதி செய்து விளையட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் உறுதி செய்தனர்.
ஆனால் இதை எதிர்த்து அன்றைய தினம் பிரமோத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூலை 29ஆம் தேதி நிராகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இந்த 18 மாத தடையானது சர்வதேச பாட்மிட்டன் சமேலானதால் விடிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி பாரீசில் தொடங்க உள்ள பாராலிம்பிக்சில் பிரமோத் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.