இளையோர் உலகக் கோப்பையை வென்றது இந்தியா
இந்தியா 6 வது முறையாக இளையோர் உலகக் கிண்ண செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்களை குவித்தது.
சூர்யவன்ஷி 80 பந்தில் 15 பவுண்டரி, 15 சிக்சருடன் 175 ஓட்டங்களை பெற்றதுடன், அணித் தலைவர் ஆயுஷ் மாத்ரே 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பின்னர் 412 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Caleb Falconer 115 ஓட்டங்களையும், Ben Dawkins 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் RS Ambrish 3 விக்கெட்டுக்களையும், Deepesh Devendran, Kanishk Chouhan தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.




