செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், இந்த சுற்றுப்பயணத்தின் T20 தொடர் கட்டாக்கில் உள்ள பரபாட்டி மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இந்நிலையில், நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய அணி சார்பில், ஹர்திக் பாண்ட்யா(Hardik Pandya) 59 ஓட்டங்களும் திலக் வர்மா(Tilak Verma) 26 ஓட்டங்களும் குவித்தனர்.

அதனை தொடர்ந்து 176 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்து வீச்சில் திணறி மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 12.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக டேவால்ட் பிரெவிஸ்(Dewald Brevis) 22 ஓட்டங்கள் பெற்று கொடுத்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!