இந்தியா

இந்தியா – தான் நிரபராதி என நிரூபிக்க சட்டம் படித்து வாதாடி வென்ற இளைஞர்..!

12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், சட்டம் படித்து வாதாடி தன்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளார்.

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் சௌத்ரி என்பவர் 12 ஆண்டுகளுக்கு கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு அமித் சௌத்ரி (அப்போதைய வயது 18) என்பவர் பாக்பத் மாவட்டத்திலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் அமித் சௌத்ரி உடன் சேர்த்து மொத்தம் 17 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில் அமித் சௌத்ரி பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் போது தான் வழக்கில் சிக்கியுள்ளார். இதனால் அவரது படிப்பு தடையானது. பின்னர் 2 ஆண்டுகள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

இதன்பிறகு, இந்த வழக்கில் தன்னை குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காக LLM முதுநிலை சட்டம் பயின்றார். பின்னர், தன் மீது போடப்பட்ட வழக்கில் உள்ள தடயங்களையம், சாட்சிகளையும் சேகரித்ததில் அமித் சௌரி குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள வழக்குகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து அமித் சௌத்ரி பேசுகையில், “தன்னோடு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு தான் உதவ விரும்புவதாகவும், அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கவிருப்பதாகவும்” தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே