சொல்பேச்சு கேட்காத இந்தியா – ஆயுதத்தை கையில் எடுத்த ட்ரம்ப்!
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளை தண்டிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் “பச்சை விளக்கு” (greenlit) சட்டமூலத்தை கையில் எடுத்துள்ளதாக செனட்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இந்த இரு கட்சி சட்டமூலமானது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அல்லது யுரேனியம் வாங்குபவர்கள் மீது 500 சதவீதம் வரை வரிகளை விதிக்க அனுமதிக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்வனவு செய்து வருகிறது. இதனால் இந்தியா மீது ட்ரம்ப் பல்வேறு தடைகளை விதித்திருந்தார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மொஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க உதவுவதாக வொஷிங்டன் குற்றம் சாட்டி வருகிறது.
இருப்பினும் நிலையற்ற உலகளாவிய சந்தைகள் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிப்பதாக டெல்லி குறிப்பிடுகிறது.
இதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா 7.7 மில்லியன் டன் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது. இது அந்த மாதத்தில் அதன் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
இந்நிலையிலேயே ட்ரம்ப் மேலும் பொருளாதார தடைகளை விதிக்கப்போதவாக அச்சுறுத்தியுள்ளார். இதற்காகவே பச்சை விளக்கு” (greenlit) சட்டமூலத்தை கையில் எடுத்துள்ளதாக செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham) தெரிவித்துள்ளார்.





