இந்தியா : 47 வயது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ரேவண்ணா குற்றவாளி எனத் தீர்ப்பு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
ரேவண்ணாவுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினத்தின் தொடக்கத்தில், நீதிமன்றத்தில் ரேவண்ணா கதறி அழுது, குறைந்த தண்டனையைக் கோரி மன்றாடினார்.
‘கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது’
வெள்ளிக்கிழமை, 47 வயது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ரேவண்ணா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், ஆபாசப் பேச்சு, சாட்சியங்களை அழித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
ரேவண்ணா கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு, விசாரணை தொடங்கிய எட்டு வாரங்களுக்குள் நீதிபதி சந்தோஷ் கஜானன பட் அவர்களால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.