உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா படுதோல்வி!!! இருவர் தற்கொலை
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி மோசமான தோல்வியைத் தாங்க முடியாமல் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 வயது இளைஞர்கள் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, இரு இளைஞர்களும் மிகுந்த சோகத்தில் இருந்ததாக அவர்களது உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தோல்வியின் அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த இருவரில் ஒருவர் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)