உலகம்

கனடா ஜனநாயகத்திற்கு 2-வது பெரிய அச்சுறுத்தல் இந்தியா: ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு

கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்