வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பந்து வீச்சு
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பந்துவீசுகிறது.
இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேனும் துவக்க வீரருமான யாஷாஸ்வி ஷெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகின்றனர்.
இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானேஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
வெஸ்ட் இண்டீஸ்:
கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), சந்தர்பால், ரெமன் ரெய்பர், பிளாக்வுட், அலிக் அதானேஸ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டி சில்வா, ரக்கீம் கான்வால், அல்சாரி ஜோசப், கேமர் ரோச், ஜோமல் வாரிகன்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனாத்கட், முகமது சிராஜ்.