இந்தியா : திருமண வீட்டிற்கு பரிசாக வந்த வெடிகுண்டு : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில், 2018 ஆம் ஆண்டு புதுமணத் தம்பதியினரையும் அவரது பெரியம்மாவையும் கொலை செய்ய பார்சல் வெடிகுண்டை அனுப்பியதற்காக முன்னாள் கல்லூரி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய “திருமண வெடிகுண்டு” வழக்கில், 56 வயதான புஞ்சிலால் மெஹர் கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதற்காக குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
திருமண பரிசாக வழங்க பட்ட வெடிகுண்டு, 26 வயது மென்பொருள் பொறியாளரான சௌம்யா சேகர் சாஹுவின் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தம்பதியினர் பொட்டலத்தைத் திறந்தபோது, அது வெடித்தது – சாஹு மற்றும் அவரது பெரியம்மா உயிரிழந்ததுடன் மேலும் பொட்டலத்தைத் திறந்த அவரது மனைவி ரீமா படுகாயமடைந்தார்.





