பரபரப்புக்கு மத்தியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ICC U-19 உலகக் கிண்ண தொடர்பில் இந்தியா India மற்றும் பங்களாதேஷ் Bangladesh அணிகள் இன்று (17) பலப்பரீட்சை நடத்துகின்றன.
சிம்பாப்வே Zimbabwe, புலவாயோ Bulawayo நகரிலுள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ஐசிசி U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் Namibia நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய U-19 அணி கடைசியாக விளையாடிய 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியை இன்றைய ஆட்டத்திலும் தொடரச் செய்வதில் அவ்வணி தீவிரம் காட்டக்கூடும்.
பங்களாதேஷ் U-19 அணி அஸிசுல் ஹக்கீம் தலைமையில் களமிறங்குகிறது. துணை தலைவரான ஜவாத் அப்ரார் உள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு 2024ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இளையோருக்கான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆயிரம் ஓட்டங்களை குவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும், பங்களாதேசுக்கும் இடையில் கிரிக்கெட் ரீதியில் தற்போது மோதல் வெடித்துள்ள சூழ்நிலையில் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




