இந்தியா – அசாம் மாநில சுரங்க விபத்து; நான்கு தொழிலாளர்களிள் உடல்கள் மீட்பு
அசாம் மாநில சுரங்க விபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சனிக்கிழமை கிடைத்த தகவலின்படி இரண்டாவது உடல் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது மேலும் மூன்று உடல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 6ஆம் திகதி அந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுமார் 42 தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்விடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கத்தை மூடியது. 33 தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிய நிலையில் ஒன்பது பேர் மட்டும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதுவரை மொத்தம் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய நால்வர் சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்கும் வரை மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அசாம் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.