இலங்கையில் பதின்ம வயதினரிடையே அதிகரிக்கும் மனநலப் பிரச்சினை
பதின்ம வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் அதிகமானோர் பதின்ம வயதினரே என தாய் சேய் குடும்ப சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டத்தில் சேரும் போது அவர் இவ்வாறு கூறினார்.
பதின்ம வயதினரில் 40 வீதம் பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனஅழுத்தம், எரிச்சல், கோபம், அதனால் ஏற்படும் தற்கொலை போன்றவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)





