அதிகரிக்கும் எல்லைப் பதற்றம் – கம்போடியாவில் 07 பொதுமக்கள் பலி!
தாய்லாந்துடனான சமீபத்திய மோதலில் கம்போடியாவில் குறைந்தது 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக 20,000 பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் கோயில் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளதுடன், பொது சேவைகளை சீர்குலைந்துள்ளதாக கம்போடிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பெரிய தாக்கங்களுக்கு மேலதிகமாக, தாய்லாந்து இராணுவம் எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கம்போடிய பொதுமக்கள் குடியிருப்புகளில் பல்வேறு வகையான நீண்ட தூர வெடிமருந்துகளை ஏவியுள்ளதால், மேலும் துயரங்களும் சேதங்களும் ஏற்பட்டு வருவதாக கம்போடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே கம்போடியப் படைகள் தங்கள் துருப்புக்களை தாக்கி வருவதாகவும், குண்டுவீச்சு ட்ரோன்கள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களைப் பயன்டுத்துவதாகவும் தாய்லாந்து இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





