பிரான்ஸில் அதிகரித்த YouTube கட்டணங்கள்!
பிரான்சில் தளத்தின் மாதாந்த கட்டணம் அதிகரித்துள்ளதாக YouTube நிறுவனம் அதிகரித்துள்ளது.
இதுவரை YouTube Premium ஒன்றின் மாதாந்த கட்டணம் 11.99 யூரோக்களாக இருந்தது.
இந்த நிலையில், தற்போது 12.99 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, YouTube Music ஒன்றின் மாதாந்த கட்டணம் 9.99 யூரோக்களில் இருந்து 10.99 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
அண்மையில் Netflix, Spotify போன்ற தளங்களுக்கான மாதாந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து, கூகுள் நிறுவனம் தற்போது மேற்படி இரண்டு செயலிகளின் கட்டணங்களையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் 80 மில்லியன் பயனாளர்களை தாம் கடந்திருந்ததாக கூகுள் அறிவித்திருந்தது.
(Visited 10 times, 1 visits today)