பாகிஸ்தானில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் பாகிஸ்தானின் கராச்சியில் கொள்ளையடிப்பதை எதிர்த்த 80 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Citizen Police Liaison Committee (CPLC) அறிக்கையை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அறிக்கையின்படி, 2023 முதல் ஏழு மாதங்களில் 52,000 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மேலும் தெருக் குற்றங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
16,000க்கும் மேற்பட்ட குடிமக்களின் கைத்தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கமிட்டி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், பாகிஸ்தானின் கராச்சியில் 33,798 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2,296 கார்கள் திருடப்பட்டன அல்லது கடத்தப்பட்டன.
கராச்சியில் சமீபகாலமாக தெருக் குற்றங்கள் மிகவும் சகஜமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் வீதி திருட்டு மற்றும் கொள்ளைகள் அதிகரிப்பதற்கு நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியே காரணம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.