இலங்கையில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 1,300 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,256 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
அவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் 256 பேர் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாகிய தொழுநோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)