ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி மூலம் 86,000 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜூன் 2023 வரை 34,771 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 86,680 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போன்ற பயிர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், மேலும் பேரீச்சம்பழம் ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணி பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)