ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான இழப்பீடு தொகையை மனிதவள அமைச்சகம் உயரத்தவுள்ளது.

வேலையிடங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடு தொகையே இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளது.

ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ செலவினங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான இழப்பீடு தொகை உயரும் என கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றங்கள் அடுத்த ஆண்டு 2025 நவம்பர் முதல் நடப்புக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் ஏற்படும் விபத்தின் தன்மையை பொறுத்து இழப்பீட்டு தொகை வரம்பு மாறுபடும் என்பது குறிப்பிடத்தகக்கத்து. அதாவது, வேலையிடத்தில் ஏற்படும் மரணங்களுக்கு இனி இழப்பீட்டு தொகை வரம்பு $269,000 என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, படுத்தப் படுக்கையாக போடும் நிரந்தரமான உடல் பாதிப்புகளுக்கு இனி அதிகபட்சமாக $346,000 வெள்ளி இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும்.

மேலும், காயங்களுக்கான மருத்துவ செலவினங்களுக்கு இழப்பீட்டு தொகை வரம்பு இனி $53,000 ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வேலையிட காயங்களுக்கான இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் வரும் என்பது கூடுதல் தகவல்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!