“திறமையற்ற முட்டாள்”: கிறிஸ்மஸ் சந்தைத் தாக்குதலுக்கு எதிராக ஜெர்மன் அதிபரை சாடிய எலான் மஸ்க்
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலா மஸ்க் தனது எக்ஸ் தள பதிவில் “ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனியில் மாக்டெபர்க் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் சந்தையில் ஏராளமான மக்களுக்கு மத்தியில் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. இதில் இருவர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் ”ஷோல்ஸ் திறமையற்ற முட்டாள்; அவர் பதவி விலகவேண்டும் ”என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவளித்த நிலையில் ட்ரம் வெற்றிப்பெற்றதை அடுத்து டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தில் திறன் துறை தலைமை பதவியை பெற இருக்கிறார்.
இதனிடையே, இன்னும் சில மாதங்களில் ஜெர்மனியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.
அந்நாட்டு கருத்துக்கணிப்புகளின் படி AFD இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் ஐரோப்பா முழுவதும் உள்ள பிற குடியேற்ற எதிர்ப்புக் கட்சிகளுக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், ஜெர்மன் அரசாங்கம் மஸ்க்கின் இடுகையை கவனத்தில் கொண்டதாகக் கூறியது, ஆனால் அதன் வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.