அமெரிக்காவை விட்டு வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு ஊக்கத்தொகை!
அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக வலுத்து வரும் போராட்டங்கள் காரணமாக தாமாக நாட்டை விட்டு வெளியேற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) செயலி மூலம் சுயமாக நாட்டை விட்டு வெளியேற விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு $2,600 டொலர் உதவித்தொகை வழங்கப்படும் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது.
இந்த செயற்திட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறலாம்.
இந்தச் சலுகை தற்காலிகமாக இருக்கலாம் என்றும் DHS சமிக்ஞை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த செயலியை பயன்படுத்துபவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தவறியதற்காக விதிக்கப்பட்ட எந்தவொரு சிவில் அபராதம் அல்லது தண்டனைகளையும் மன்னிக்க தகுதி பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் பதவியேற்ற முதல் ஆண்டில் 675,000 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒரு முறை கட்டாய நாடுகடத்தலுக்கு $18,245 செலவாகும் என்றும், செயலி வழியாக $5,100 டொலர் மாத்திரமே செலவாகும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.





