தகாத உறவு… வாடகை அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணி்ன் சடலம்!!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு உயிரிழந்தவர் பலுகொல்லாகம, மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும், தகாத உறவில் இருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக, குறித்த நபர் பெண்ணின் கழுத்தை போத்தல் துண்டு ஒன்றினால் அறுத்து கொலை செய்துள்ளார்.எனினும் சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 25 times, 1 visits today)