தாய்லாந்தில் துரியன் பழ வாடையால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில் துரியன் பழ வாடையைத் தாங்க முடியாமல் பேருந்து ஊழியர் ஒருவர் மயங்கிவிழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
8ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பெண் ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பேருந்தில் ஏறிய பயணி ஒருவர் தம்முடன் சில துரியன் பழங்களைக் கொண்டுவந்தார். அதன் வாடை தமக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்தியதாக அந்த ஊழியர் கூறினார்.
மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட அவர் பின்னர் மயங்கிவிழுந்துள்ளார். அவர் பேருந்து இருக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் புகைப்படம் Facebookஇல் பகிரப்பட்டது.
கடந்த மே மாதம் தாய்லந்தின் பேங்கோக் பொதுப் போக்குவரத்து ஆணையம், துரியன் பழங்களின் வாடையைப் “பொதுத் தொல்லையாக” வகைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)