தமிழ்நாடு

தமிழகத்தில் டிவி ரிமோட் உடைந்ததால் 7ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு !

தமிழக மாவட்டம் சேலத்தில் டிவி ரிமோட்டை உடைத்ததால், 7ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்த்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி மற்றும் பிரபா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

சக்திவேலின் மகள்களில் கவியரசி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ரிமோட்டை யார் வைத்திருப்பது என்பதில் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததில் ரிமோட் உடைந்துள்ளது.

இதனையடுத்து கவியரசி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரிமோட் உடைந்ததால் பெற்றோருக்கு பயந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் சிறுமி கவியரசியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!