ஜெர்மனியில் வீடுகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனை!

ஜெர்மனியில் சட்ட விரோதமாக இயங்கிய இணையதளம் ஒன்று பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் பொலிஸார் சட்ட விரோதமான முறையில் செயற்படுகின்ற ஒரு இணைய தளமான கிரைம் மார்க்கட் என்று சொல்லப்படுகின்ற கருப்பு சந்தை மீது பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு இருந்தது.
அதாவது இந்த கிரைம் மார்க்கட் என்று சொல்லப்படுகின்ற இணைய தளத்தில் 180000 பேர் அங்கத்துவராக பதிவு செய்துள்ளதாகவும், கூடுதலாக போதை பொருள் வர்த்தகம் மற்றும் சட்ட விரோதமான ஆயத விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஜெர்மன் பொலிஸார் பாரிய சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டதாகவும், அதாவது 100க்கு மேற்பட்ட வீடுகளில் முற்றுகையிட்டு சோதனை இட்டதாகவும், சோதனையின் அடிப்படையில் 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)