கொழும்பில் தமிழ் மாணவியின் மாணவியின் உயிரை பறித்த மின்னழுத்தி

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்னதி மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய சுரேந்திரன் கவிதா என்ற மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)