ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடல் அலையில் சிக்கி 4 இந்தியர்கள் பலி!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் கடலில் மூழ்கி நான்கு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் கடலில் மூழ்கி நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக கான்பெர்ராவில் உள்ள இந்திய அரசின் தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், “ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பிலிப் தீவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இந்திய அரசின் குழு, இறந்தவர்களின் உறவினர்களுடன் தொடர்பில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Four Indians Drown At Philip Island Beach In Australia's Victoria

நேற்று மாலை 3.30 மணியளவில் அவசரகால சேவைக்கான அழைப்புகள் வந்தன. அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் 40 வயது பெண் ஆகிய 4 பேர் கடலில் மூழ்கிவிட்டதாக தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

விக்டோரியா பிலிப் தீவு கடற்கரையில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவர்கள் கடலில் குளித்ததாகவும் அப்போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித