அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் சகோதரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) சகோதரிகள் அடியாலா(Adiala) சிறைக்கு வெளியே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உஸ்மா கான்(Usma Khan) மற்றும் அலீமா கான்(Aleema Khan) ஆகியோர் சிறை வாயில்களுக்கு வெளியே கூடி, இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், முன்னாள் பிரதமர் பலவீனமானவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் தோன்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டிசம்பர் 2ம் திகதி அடியாலா சிறையில் இம்ரான் கானை சகோதரி உஸ்மா கான் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.




