இம்ரான் கானுக்கு சிறையிலேயே விஷம் வைக்கப்படலாம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து வருந்துவதாக அவரது மனைவி புஷிரா பீபி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு புஷிரா பீபி எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கடித்தில் சிறையில் இம்ரான் கானுக்கு விஷம் கொடுக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இம்ரான் கானை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமான காரணமின்றி தனது கணவர் அடையாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 2018-2022 ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பிரதமராகப் பெற்ற அரசுப் பரிசுகளை விற்றதற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)