ஜெர்மனி பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
ஜெர்மனி நாட்டில் இருந்து விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் தமது குழந்தைகளை பாடசாலையில் இருந்து விடுமுறை எடுத்து செல்வதற்காக அவர்கள் கையாண்டு வந்த தவறான மருத்துவ அத்தாட்சி பெறும் முறை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் 2 கிழமைகளுக்கு பாடசாலைகளில் கோடை கால விடுமுறை ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் பல பெற்றோர்கள் கோடைகால விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தங்களது பிள்ளைகளுடன் தமது சொந்த நாட்டுக்கு விடுமுறையை கழிக்க செல்வது வழமையாகும்.
இதேவேளையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள பிரகாரம்
பாடசாலை மாணவர்கள் முன்னதாகவே விடுமுறைக்கு செல்வதற்காக பாடசாலைக்கு தாம் சுகயீனமாக இருப்பதாக வைத்திய அத்தாட்சி பத்திரங்களை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
வைத்திய சங்கமானது தற்பொழுது இவ்வாறு வைத்திய அத்தாட்சி பத்திரங்களை வழங்க மாட்டோம் என தெரிவித்து இருக்கின்றது.
நோற்றின்பிஸ்பாலின் மாநில கல்வி அமைச்சின் படி இவ்வாறு வைத்திய அத்தாட்சி தொடர்பில் பாடசாலை நிர்வாகமானது சந்தேகத்தின் அடிப்படையிலேயே கேட்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் சகல மாணவர்களிடம் இருந்தும் இவ்வாறான வைத்திய அத்தாட்சி பத்திரத்தை தாம் கேட்பது இல்லை என கூறி இருக்கின்றது.
இந்த மாநில வைத்திய சங்கத்தின் கருத்தின் படி தங்களது வைத்திய நிலையங்களில் பெருமளவு நோயாளிகள் வருகை தருகின்றார்கள்.
அதன் காரணத்தினால் இவ்வாறான வைத்திய அத்தாட்சி பத்திரத்தை வழங்குவது தங்களது கடமைபாடு இல்லை.
எனவே பாடசாலை நிர்வாகமானது ஓனம் ஸ்செளனட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பை பிரத்தியேகமாக இதற்காக நியமிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கின்றது.