கொழும்பில் முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்!
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய்க்கு எதிரான போராட்டத்திலேயே அடுத்த இரண்டு முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக வைத்தியர் விஜயமுனி தெரிவித்தார்.
பருவமழை தொடங்குவதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றார்.
டெங்கு பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும், மழைவீழ்ச்சி அதிகரிப்பு காரணமாக, அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களின் போது, தனியார் சொத்துக்கள் மாத்திரமன்றி, பொது இடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில், கொழும்பு மாநகர எல்லையில் மொத்தமாக 2,138 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, பெரும்பான்மையானவர்கள் கறுவாத்தோட்டம் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.