இலங்கை ஜனாதிபதி எலோன் மஸ்க் இடையே முக்கிய சந்திப்பு!

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
இதன்போது Starlink செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயன்முறையை விரைவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
Starlink என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நெட்வொர்க் ஆகும்.
(Visited 14 times, 1 visits today)