இலங்கையில் வாகன வருவாய் உரிமங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!

இலங்கை – மேல் மாகாணத்தில் வாகன வருவாய் உரிமங்களை வழங்கும் அனைத்து உரிம கவுன்ட்டர்களும் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில்மூடப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2025 மே 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிக கே. விஜயசிங்க தெரிவித்தார்.
அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருவாய் உரிமம் பெறுவதற்கான கடைசி திகதி 2025 மே 5 மற்றும் 6 ஆகும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு உரிமம் வழங்கும் பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதம் விதிக்காமல் அந்த வாகனத்திற்கான உரிமக் கட்டணத்தைச் செலுத்தி வாகன வருவாய் உரிமத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)