தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கான முக்கிய தகவல்
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், தைராய்டு சுரப்பி நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக பெரும்பாலானோருக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. தைராய்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற சில உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இதனால், வளர்சிதை மாற்றம் மந்தமாகுதல், உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் உள்பட உடல் ஆரோக்கியத்தில் (Health Tips) பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தைராய்டு பிரச்சனை தீர மருந்துகள் மிக அவசியம் என்றாலும், தைராய்டு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவும் மிகவும் முக்கியமானது. தைராய்டு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன. எனவே தைராய்டு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த சூப்பர்ஃபுட்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு உறுப்பு. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தூண்டுவதால், தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சளை பால் அருந்துவது நல்லது. ஏனெனில் மஞ்சளை பாலில் கலந்து அருந்துவதால், அதன் பலன்கள் முழுமையாக கிடைக்கும் என்கின்றனர் ஆரோக்கிய வல்லுநர்கள்.
நட்ஸ் மற்றும் விதைகள்
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு செலினியம் அவசியம். இது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது . அதோடு, சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எனவே தைராய்டு நோயாளிகள் நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்ள வேண்டும்.
இஞ்சி
இஞ்சி தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றொரு சூப்பர்ஃபுட் ஆகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
பச்சை இலை காய்கறிகள்
கீரை, கோஸ் போன்ற இலை பச்சை காய்கறிகள் தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன.அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு உதவுகின்றன. உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
ஆப்பிள்
தைரய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் எடையையும் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பியும் சீராக வேலை செய்யும். ஆப்பிள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறுவதன் காரணமாக தைராய்டு சுரப்பியை தூண்டுவதாக என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் உணவுகள்
தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அயோடின் அவசியம். எனவே அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. அத்தகைய சூழ்நிலையில், மீன், முட்டை மற்றும் அயோடின் உப்பு ஆகியவற்றை உட்கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாது அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை. ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டை பாதிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் மேமடுத்துகிறது.