ஜெர்மனியில் சமூக உதவி பணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
ஜெர்மனியில் பண வீக்கம் காரணமாக சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் போகிகல்ட் என்று சொல்லப்படுகின்ற புதிய சமூக உதவி கொடுப்பனவு திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் படி தனி ஒரு நபருக்கு ஆக கூடிய தொகையாக 502 யூரோக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்பொழுது ஜெர்மனியில் பண வீக்கம் காரணமாக இந்த 502 யூரோவானது பற்றாக்குறையாகும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த 502 யூரோ சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தற்பொழுது வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்த தொகையை 725 யூரோவா உயர்த்த வேண்டும் என்று சமூக அமைப்பானது வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
ஹாட்பியர்ஸ் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் தகவல்களை வழங்கி வரும் ஹாட்ஸ்பியர் இணையதளத்தின் கருத்தின் படி இந்த 725 யூரோவானது போதுமானதாக இல்லை என்பதுடன்
இந்த தொகையை 806 யூரோவாக அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.