இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.




