இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சந்திம ஜீவந்தர, “ஜேஎன் 1” கொரோனா கிளையினங்கள் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.
(Visited 5 times, 1 visits today)