ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – 200,000 பேரை வீட்டைவிட்டு வெளியேற உத்தரவு
ஜப்பானில் வீடுகளைவிட்டு வெளியேறுமாறு 200,000 பேரை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாட்டின் மேற்கு வட்டாரத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் ஆபத்து குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
Kong-rey புயல் காரணமாக மேற்கு வட்டாரத்தில் இடிமின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் கூறியது.
இதையடுத்து மட்சுயாமா (Matsuyama) நகரில் உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு 10 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 200, 000 பேரை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அது கட்டாயம் இல்லை என்றாலும் பேரிடர் அபாய நேரத்தில் அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவது ஜப்பானில் வழக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)