பிரித்தானியாவில் குடிவரவு சுகாதார கட்டணத்தை அதிகரிக்கும் அரசாங்கம்!
பிரித்தானியாவில் குடிவரவு சுகாதார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குடிவரவு சுகாதார கட்டணத்தை அதிகரிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
குடியேற்றத்தில் இந்த மாற்றங்கள் ஜனவரி மாதம்16ஆம் திகதி நடைமுறைக்கு வரும். அரசாங்கம் குடிவரவு சுகாதார கட்டணத்தில் கணிசமாக 66% அதிகரிப்பை அரசாங்கம் அறிவித்தது.
இந்த மாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு முன் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது.
கட்டணம் வருடத்திற்கு 624 பவுண்டில் இருந்து 1,035 பவுண்டாக அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குடிவரவு சுகாதார கட்டணம், சுகாதாரச் செலவுக்கு புலம்பெயர்ந்தோர் பங்களிப்பை உறுதி செய்வதற்காக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குடிவரவு சுகாதார கட்டணம் என்பது (பெரும்பாலான) விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் செலுத்தப்படும் ஒரு முன்கூட்டிய செலவாகும்.
இதனால் தனிநபர் இங்கிலாந்தில் இருக்கும் போது தேசிய சுகாதார சேவையை (NHS) முழுவதுமாக அணுகுவதற்கான உரிமையைப் பெறுகிறார்.
ஒருவர் தேசிய சுகாதார சேவையை எவ்வளவு அணுகலாம் என்பதற்கு வரம்பு இல்லை. கூடுதலாக, தேசிய சுகாதார சேவையை பயன்படுத்த மாட்டீர்கள் என நம்பினாலும் அல்லது தனியார் சுகாதார சேவைக்கு பணம் செலுத்த விரும்பினாலும் குடிவரவு சுகாதார கூடுதல் கட்டணத்திலிருந்து விலக விருப்பம் இல்லை.