இலங்கை

பாராளுமன்றத்தை கலைக்க ஆதரவளிக்குமாறு ஐ.ம.ச கோரிக்கை!

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி  சுட்டிக்காட்டியதுடன், இதற்கு ஆதரவளிக்குமாறு ஏனைய கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,  பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சபையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுன வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். எனவே, சபையைக் கலைத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு அவருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நாங்கள் சவால் விடுக்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்றம் இன்று குழப்பமடைந்துள்ளது மற்றும் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, அது கலைக்கப்படுவதே சிறந்தது, யாருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்