உயிருக்கு உலைவைக்கும் சட்டவிரோத கடற்பயணங்கள் : பலர் மாயம்!
ஐரோப்பாவை அடையும் நோக்கில் 200 பேர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல்போயுள்ளதாகவும் காம்பியா கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குக் கரைப் பகுதியில் உள்ள ஜினாக் (Jinack) கிராமத்திற்கு அருகே நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதுவரை 96 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத பயணங்களால் கடந்த 2024 ஆம் ஆண்டில் 9,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




