இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – ஆண்களுக்கு எச்சரிக்கை
பொதுவாக சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். அவை டைப்-1 மற்றும் டைப்-2 ஆகும். இதில் டைப்-1 சர்க்கரை நோயின் அறிகுறிகள் கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதை நிறுத்திய உடனே தெரியும்.
ஆனால் டைப்-2 சர்க்கரை நோயில் உடலில் இன்சுலின் உணர்திறன் உருவாகிறது. அதேபோல் இந்த சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வகையில் ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், சில அறிகுறிகள் தெரியும். அவை என்னென்ன என்பதை காண்போம்.
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும்: சர்க்கரை நோயானது ஆண்களின் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, விந்தணு எண்ணிக்கை, தரம் அல்லது ஒட்டுமொத்த கருவளத்தையும் பாதிக்கும். குறைவான டெஸ்டோஸ்டிரோன் விறைப்புத்தன்மை கோளாறு ஏற்படுத்தலாம்.
கருவுறுதல் பிரச்சனை: சர்க்கரை நோய் ஏற்பட்டால் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும். அதில் குறைவான விந்தணு எண்ணிக்கை, விந்தணுக்களின் தரம் குறைவது, ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை அடங்கும்.
தசை இழப்பு: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு தானாகவே தசை இழப்பு ஏற்படலாம். ஏனெனில் உடலால் சர்க்கரையை ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது. இதனால் தசைகளை உடைத்து உடல் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக தசை இழப்பு ஏற்படலாம்.
எடை இழப்பு: ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் தசைகள் இழக்கச் செய்வதோடு, எடை இழப்புக்கும் வழிவகுக்கும். அதன்படி உடல் எடை குறைவதை நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகவும்.
கழுத்து தோல் கருப்பாவது: கழுத்தில் திட்டு திட்டாக கருப்பு நிறமாக இருந்தால், இது நீரிழிவு நோய் இருப்பதற்கான எச்சரிக்கையாகும். அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரை உடனே அணுகவும்.
கை கால்களில் வலி: அதிகளவு சர்க்கரை நமது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் கை மற்றும் கால்களில் வலி ஏற்படக்கூடும். அப்படி உங்கலுக்கும் பாதங்களில் வலி ஏற்பட்டால் அதுவும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.