நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த பிரயோசனமும் இல்லை – M.A சுமந்திரன்
நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த பிரயோசனமும் இல்லை. பொங்கல் விழாவிலே நாங்கள் ஈடுபடுகின்ற போது ஒரு எதிர்பார்ப்பை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே இதனை உணர்த்துகின்றது என எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை பிரதேச சபையில் இன்று (24) இடம் பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், எமது தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் எப்போதும் பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்ற விடையத்தினை ஏன் அவர் சொன்னார். பொங்கல் விழாவில் ஈடுபடுகின்ற போது ஒரு எதிர்பார்ப்பையே அவர் வெளிப்படுத்துகின்றார்.

வாழ்க்கையில் நம்பிக்கையோடு பயணித்தால் மாத்திரமே நாங்கள் வெற்றி பெற முடியும் இதனையே எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த கட்சியினுடைய பொங்கல் விழாவிலே ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்ற அதே தருணத்தில் நாங்கள் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

தனித்துவத்தை பேணவேண்டிய ஒரு கட்டாய கடமை எங்களுடைய கட்சிக்கு இருக்கின்றது. ஆகவே ஒற்றுமையாக இருக்க வேண்டிய இடத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
ஒற்றுமையாக சேர்ந்து செல்பவர்களுடன் ஒற்றுமையாக சேர்ந்து பயணிக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க முடியாத இடங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது அதுவே எமது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.





