”கருப்பை இருந்தால் பெண், இல்லையென்றால் பெண் இல்லை” – மஸ்கின் கருத்தால் சர்ச்சை!
உலக செல்வந்தரான எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“உனக்கு கருப்பை இருந்தால், நீ ஒரு பெண். இல்லையென்றால், நீ ஒரு பெண் அல்ல” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த பதிவுதொடர்பில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
பல பயனர்கள் மஸ்கின் கருத்தை ஆதரித்துள்ள அதேநேரம் ஏனையவர்கள் MRKH நோய்க்குறி அல்லது கருப்பை நீக்கம் போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் திருநங்கை பெண்களின் இருப்பை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர்.
கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) திருநங்கைகள் தொடர்பில் ஆதரவான கருத்தை வெளியிட்ட நிலையில் மஸ்கின் இந்த கருத்து வந்துள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு காலப் கணக்கெடுப்பின்படி, 51 சதவீத அமெரிக்கர்கள் ஒருவரின் பாலினத்தை மாற்றுவது தார்மீக ரீதியாக தவறு என்று நம்புகிறார்கள்.
அதே நேரத்தில் 44 சதவீதம் பேர் அது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று நம்புகிறார்கள். 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறார்களுக்கான பாலினத்தை உறுதிப்படுத்தும் பராமரிப்பைத் தடை செய்யும் சட்டங்களை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





